என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஈரோடு மழை"
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
ஈரோட்டில் நேற்று மதியம் திடீரென வெயில் அடிக்க தொடங்கியது. இந்த நிலையில் மாலை மீண்டும் மேகமூட்டமாக காணப்பட்டது. இதையடுத்து சாரல் மழை தூறியது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சாக்கடைகள் நிரம்பி மழை தண்ணீர் வீடுகள் முன்பு தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். அதன் பிறகு மழை வெள்ளம் வடிந்தது.
நம்பியூர் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மொட்டணம் கிராமம் மஜ்ரா பழையூர் பகுதியில் பாட்டப்பா கவுண்டர் (72) என்பவரது வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் அவர் தத்தளித்து கொண்டு இருந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் அவருக்கு சொந்தமான வீடு இடிந்து விழுந்து சேதமானது. இதே போல் மழை காரணமாக சென்னியப்பன் என்பவருக்கு சொந்தமான வீட்டு சுவரும் இடிந்து விழுந்தது.
தொடர் மழை காரணமாக நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 48 ஏக்கர் குளம் 30 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பி வழிகிறது. தண்ணீர் சாலையில் 5 அடிக்கும் மேல் ஓடியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் தண்ணீர் வடிந்ததும் போக்குவரத்து தொடங்கியது.
இதே போல் அந்தியூர் அருகே உள்ள 130 ஏக்கர் பரப்பளவில் உள்ள கெட்டிசமுத்திரம் ஏரியும் நிரம்பி வழிகிறது. உபரி நீர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் வாழை, நெல், கரும்பு, சோள பயிர்கள் அழுகி வருகிறது.
இதேபோல் ஆப்பக்கூடல் அருகே உள்ள சஞ்சீவிராயன் ஏரியும் நிரம்பி வழிகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது.
ஈரோடு நகரில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் நடை பாலத்தை தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-25, நம்பியூர்-12, பெருந்துறை-7, எலந்தகுட்டை மேடு-3.2, அம்மாபேட்டை-1, கொடி வேரி-1.2, கோபி-2.2, பவானிசாகர்1.2, அம்மாபேட்டை-1, வரட்டுபள்ளம்-1.
ஈரோடு:
வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. ஈரோட்டிலும் கடந்த 2 நாட்களாக மிதமான மழை முதல் கன மழை பெய்து வருகிறது.
நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது.
டி.என்.பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பகுதியில் அதிகபட்சமாக 30 மி.மீட்டர் மழை பெய்தது.
மேலும் பவானிசாகர், சத்தியமங்கலம், கவுந்தப்பாடி, பவானி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகயிலும் மிதமான மழை பெய்தது.
இந்த மழையால் வெப்பம் அடியோடு தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
வனப்பகுதியான தாளவாடியில் நேற்று முன்தினம் நல்ல வெயில் அடித்தது. அதே சமயம் இரவில் சாரல்மழை தூறிக்கொண்டிந்தது. தாளவாடி பகுதியில் 18 மி.மீ. மழை பெய்தது.
ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மழைதூறிக்கொண்டே இருந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடைமழை கொட்டி வருகிறது. நேற்றும் வழக்கம் போலவெயில் வறுத்தெடுத்தாலும் மாலையில் திடீரென கருமேகக் கூட்டங்கள் சூழ்ந்தன.
மாலை 6 மணிக்கு மேலும் இரவு 8 மணிக்கு மேலும் இடி-மின்னலுடன் மழை கொட்டத்தொடங்கியது.
பவானி, மொடக்குறிச்சி மற்றும் சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதேபோல் பெருந்துறை, பவானிசாகர் மற்றும் வனப்பகுதியான தாளவாடியிலும் பரவலாக மழை பெய்தது. சூறை காற்றுடன் மழை பெய்ததால் இக்களூர் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்டமரங்கள் முறிந்து விழுந்தது. மின்சார கம்பம் மீது மரம் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.
தாளவாடி பகுதியில் தொடர்ந்து 3 நாட்களாக கோடைமழை கொட்டி வருகிறது. அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த இடியும்- மின்னலுமாக இருந்தது. கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிதமான மழை மட்டுமே பெய்தது.
எனினும் ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து கோடை மழைபெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்